பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நவ., 18, 1982திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில், 1921 பிப்., 28ம் தேதி பிறந்தவர், தி.ஜானகிராமன். கும்பகோணம் அரசு கல்லுாரியில் பயின்ற போது, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். பள்ளி ஆசிரியராகவும், சென்னை மற்றும் டில்லி வானொலி நிலையத்தில், கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார். 'கணையாழி' மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். நாவல், சிறுகதை,


இதே நாளில் அன்று

நவ., 18, 1982

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில், 1921 பிப்., 28ம் தேதி பிறந்தவர், தி.ஜானகிராமன். கும்பகோணம் அரசு கல்லுாரியில் பயின்ற போது, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். பள்ளி ஆசிரியராகவும், சென்னை மற்றும் டில்லி வானொலி நிலையத்தில், கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார். 'கணையாழி' மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என, எழுத்தில் பன்முகம் காட்டினார். 1964-ல் வெளியான, இவரது, 'மோகமுள்' நாவல், பெரும் வரவேற்பை பெற்றது. 'அம்மா வந்தாள்' நாவல் ஆங்கிலம், குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
'சக்தி வைத்தியம்' என்ற சிறுகதை தொகுப்புக்காக, 'சாகித்ய அகாடமி' பரிசு பெற்றார். 1982 நவ., 18ம் தேதி, தன், 60வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர், தி.ஜானகிராமன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-நவ-202014:09:55 IST Report Abuse
Bhaskaran அவரின் மோகமுள் மிக சிறந்த நாவல் .சிறுகதைகளில் மனிதாபிமானத்தை மிக அருமையாக வலியுறுத்தியிருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X