புதிய பொருளாதார கொள்கை வெளியிட்டார் ஜோ பைடன்

Added : நவ 17, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், ஜனவரியில், அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். அவர் நேற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், ஜனவரியில், அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். அவர் நேற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்யா நாதெல்லா உள்ளிட்ட முக்கிய தொழில் பிரமுகர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடினார். அப்போது, புதிய அரசின் பொருளாதார கொள்கை குறித்து, அவர் பேசியதாவது:

ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட கொரோனா நிவாரண சட்டம் போல, மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு சட்டம் இயற்றப்படும். இதை, பார்லி., உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 'சார்ஜ்' மையங்கள்மின் வாகன தயாரிப்பு துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மின் வாகனங்களுக்கு, நாடு முழுதும், 5.50 லட்சம், 'சார்ஜ்' மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், நல்ல ஊதியத்துடன், 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். பசுமை எரிசக்தி தொடர்பான ஆய்விற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகனம், பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு துறைகளில் வருங்கால தேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அமெரிக்காவில் பொருட்களை தயாரிக்காத எந்த நிறுவனத்திற்கும், அரசு ஒப்பந்தங்கள் வழங்க பட மாட்டாது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில், அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கும். அதற்காக, புதிய தொழில்நுட்பத்தில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில், 22 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.இதன் வாயிலாக, அதிக ஊதியமுள்ள, 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இத்திட்டத்திற்கு, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்புதல் அளித்து உள்ளன.சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் ஆகியவை நவீன முறையில் மேம்படுத்தப்படும். சாதாரண மக்களுக்கு, குறைந்த விலையில், 15 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். கொரோனா, நமக்கு அதிவேக இணைய சேவையின் தேவையை புரிய வைத்துள்ளது.

குறிப்பாக, தொலை துார பள்ளிகள், மாணவர்கள், மருத்துவ சேவைகளுக்காக அதிவேக இணைய வசதி ஏற்படுத்தப்படும். வேலைவாய்ப்புஆப்ரிக்க - அமெரிக்கர்களின் வரலாற்று சிறப்பு மிக்க கல்லுாரிகள், பல்கலைகள், சமுதாயக் கல்லுாரிகள் ஆகியவற்றை புனரமைக்க தேவையான முதலீடு செய்யப்படும். அவர்களின், 40 லட்சம் பழைய கட்டடங்கள் புதுப் பிக்கப் படும்; 20 லட்சம் வீடுகள் சீரமைக்கப்படும்.

இது போன்ற முதலீடுகள், நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்து, போட்டியை எதிர்கொள்ளவும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.இவ்வாறு, அவர் பேசினார்.உயிரிழப்பு அதிகரிக்கும்!கொரோனா பாதிப்பால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதனால், மக்களின் உயிர் காக்க, டிரம்ப் என்னுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன். இல்லையெனில், மேலும் ஏராளமானோர் இறக்கும் அபாயம் ஏற்படும்.

ஜோ பைடன்அமெரிக்க அதிபர் தேர்வு ராணுவ வீரர்கள் 'வாபஸ்'ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ வீரர்கள், 5,000 பேர் உள்ளனர். இது, 2,500 ஆக குறைக்கப்படும். அதுபோல, ஈராக்கில் உள்ள, அமெரிக்க ராணுவ வீரர்கள், 3,000 பேரில், 500 பேர், 'வாபஸ்' பெறப்படுவர். இதற்கான உத்தரவில், டிரம்ப் விரைவில் கையெழுத்திட உள்ளதாக, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X