சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இணைப்பு சாலையில் வெள்ளம்

Added : நவ 17, 2020
Share
Advertisement
மாதவரம் : பாலம் இணைப்பு சாலையில் தேங்கிய மழைநீரால், கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர். சென்னை, புழல் - மதுர வாயல் புறவழிச்சாலையின்இடையே, அந்தந்த பகுதிகளின் உட்புற சாலைகளை இணைக்கும் 'அண்டர் -பாஸ்' எனும் சுரங்க இணைப்பு சாலை வசதி உள்ளது. புறவழிச்சாலையின் இருபுறமும் உள்ள, மழைநீர் வடிகால்களில், செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்தும், மண் அடைந்தும்,

மாதவரம் : பாலம் இணைப்பு சாலையில் தேங்கிய மழைநீரால், கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர்.

சென்னை, புழல் - மதுர வாயல் புறவழிச்சாலையின்இடையே, அந்தந்த பகுதிகளின் உட்புற சாலைகளை இணைக்கும் 'அண்டர் -பாஸ்' எனும் சுரங்க இணைப்பு சாலை வசதி உள்ளது. புறவழிச்சாலையின் இருபுறமும் உள்ள, மழைநீர் வடிகால்களில், செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்தும், மண் அடைந்தும், பராமரிப்பின்றி கிடந்தன. சில தினங்களாக தொடரும் மழையால், கால்வாயில், தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி, அங்குள்ள, இணைப்பு சாலைகளில் தேங்கியது.இதனால், அந்த சாலைகள் சேதமடைந்துள்ளன.

அவற்றை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், தண்ணீரில் சிக்கி, கீழே விழுந்து செல்கின்றனர். விபத்து, உயிரிழப்பை தவிர்க்க, கால்வாய் அடைப்புகளை அகற்றி, மழை நீர், மாதவரம் ரெட்டேரிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையை ஒட்டிய மழை நீர் வடிகால்களில், தடுப்பு ஏதும் இல்லாததால், இரவில், அந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி, உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.

கடந்தாண்டு, சூரப்பட்டில் வசித்த, சென்னை காவல் துறை அதிகாரி, இரவுப்பணி முடிந்த வீட்டிற்கு செல்லும் போது, அங்குள்ள கால்வாயில் விழுந்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X