சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய மெத்தனத்தால் ஆலந்துாரில் விபத்து அபாயம்

Added : நவ 17, 2020
Share
Advertisement
நங்கநல்லுார் : நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் பகுதிகளில், மரக்கிளைகள் அகற்ற, மாநகராட்சி தயாராக இருந்தும், மின்வாரியம் ஒத்துழைக்காததால் சிக்கல் எழுந்துள்ளது. ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட, ஆதம்பாக்கம், நங்கநல்லுார், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில், அதிகளவிலான மரங்கள் உள்ளன. இவற்றின் கிளைகள், பல இடங்களில் மின் கம்பிகளை உரசிக் கொண்டுள்ளன.சமீபகாலமாக, தொடர்

நங்கநல்லுார் : நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் பகுதிகளில், மரக்கிளைகள் அகற்ற, மாநகராட்சி தயாராக இருந்தும், மின்வாரியம் ஒத்துழைக்காததால் சிக்கல் எழுந்துள்ளது.

ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட, ஆதம்பாக்கம், நங்கநல்லுார், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில், அதிகளவிலான மரங்கள் உள்ளன. இவற்றின் கிளைகள், பல இடங்களில் மின் கம்பிகளை உரசிக் கொண்டுள்ளன.சமீபகாலமாக, தொடர் மழையுடன், சூறைக்காற்றும் வீசுவதால், மரக்கிளைகள் மின் கம்பியில் உரசி, தீப்பிடித்து கம்பிகள் அறுந்து விழுகின்றன. இதனால், அடிக்கடி மின் தடை, உயர், தாழ் மின் அழுத்தங்கள் ஏற்படுகின்றன.

எனவே, மின் கம்பிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.மரக்கிளைகள் அகற்ற மாநகராட்சியினர் தயார் நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட பகுதியில் மின் வாரியம் உதவ தயாராக இல்லாததால், சிக்கல் எழுந்துள்ளது.இது குறித்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு, சீரான மின் வினியோகத்திற்கு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X