ஆக்கிரமிப்பு வேண்டாம்!
சுயசார்புள்ள நாடாக நாம் மாறவேண்டுமானால், அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தொழில் துறை என அனைத்திலும், அறிவு சார்ந்த முன்னோடிகளாக திகழ வேண்டும். இதைச் செய்யும்போது, நாம் ஆக்கிரமிப்பாளர்களாக மாறக் கூடாது. சில நாடுகள், ஆக்கிரமிப்பு ஆசையில் செயல்படுகின்றன.
நிதின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,
அரசியல் செய்வதில்லை!
சிவசேனா என்றைக்குமே ஹிந்துத்துவா கட்சியாக தான் இருந்துள்ளது; தொடர்ந்து இருக்கும். இது குறித்து, எங்களுக்கு யாரும் சான்றிதழ் தர தேவையில்லை. ஹிந்துத்துவா கொள்கையை வைத்து, அவர்களை போல நாங்கள் அரசியல் செய்வதில்லை. தேவைப்படும் போது, ஹிந்துத்துவா என்ற வாளைச் சுழற்ற, சிவசேனா என்றைக்கும் தயங்காது.
சஞ்சய் ராவத்
மூத்த தலைவர், சிவசேனா
பெண்களுக்கு பாதுகாப்பில்லை!
உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என, பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காததை அடுத்து, தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துள்ளன. பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம், எந்தளவு வெற்றிகரமாக செயல்படுகிறது என, முதல்வர் யோகி ஆதித்யநாத் சொல்லத் தயாரா?
பிரியங்கா
பொதுச் செயலர், காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE