ஸ்ரீபெரும்புதுார் : தாம்பரம், சோமங்கலம் அருகே துவங்கும், அடையாறு ஆறு கிளை கால்வாயில் அமைக்கப்பட்ட தடுப்பணையின் ஷட்டர்கள், நேற்று திறக்கப்பட்டன.
தாம்பரம் அடுத்த சோமங்கலம் அருகே துவங்கும் அடையாறு கிளை கால்வாயில், 4.50 கோடி ரூபாய் மதிப்பில், பாலத்துடன் கூடிய தடுப்பணை, புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில், தண்ணீரை தடுத்து நிறுத்தவும், வெளியேற்றவும்,எட்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த தடுப்பணை கட்டுமான பணிகள், சில நாட்களுக்கு முன் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கன மழையால், சோமங்கலம் அருகே துவங்கும் அடையாறு கிளை கால்வாயில் வெள்ள நீர் அதிகரித்தது.
இதையடுத்து, கட்டுமான பணிக்காக, கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக கரை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும், வெள்ள நீர் வெளியேறும் வகையில் தடுப்பணையின் எட்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE