தாம்பரம் : பெருங்களத்துாரில், மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய நபரை, போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், அருணகிரி நகரில், பாலமுருகன், 42, என்பவர், மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு, 12ம் தேதி, குண்டுமேடைச் சேர்ந்த செந்தில், 38, என்பவர் வந்தார். பாலமுருகனிடம், பெருங்களத்துாரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், 40 ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கி வரச்சொன்னதாக கூறி, மிரட்டினார்.மேலும், 'பணம் கொடுக்கவில்லை எனில், கடையை நடத்த விடமாட்டேன்' என்றும், தனக்கு அனைத்து ரவுடிகளை தெரியும் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து, பாலமுருகன், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து, செந்திலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE