மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரிக்கான நீர்வரத்து, தாமதமாக துவங்கி உள்ளதால், இந்த ஆண்டு ஏரி முழுமையாக நிரம்புமா என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகளில், மதுராந்தகம் ஏரி முதன்மையானதாக உள்ளது.இது, 94 மில்லியன் கன அடி கொள்ளளவும், 2,411 ஏக்கர் நில பரப்பளவும் உடையது. 2,853 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, பாசனம் பெறுகின்றன.செய்யாறு, வந்தவாசி, கிளையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், இந்த ஏரி நிரம்ப முக்கிய காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு பருவ மழைக்கு இந்த ஏரி முழுமையாக நிரம்பியது. எனினும், இந்த ஆண்டுக்கான பருவ மழை கடந்த மாதம் துவங்கியும், ஏரிக்கான நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், இரு தினங்களாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், மதுராந்தகம் ஏரிக்கான நீர்வரத்து தற்போதுதான் துவங்கி உள்ளது.ஏரிக்கு நீர்வரத்து தாமதமாக துவங்கி உள்ளதால், இந்த ஆண்டு ஏரி, முழுமையாக நிரம்புமா என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE