பீஹார் புதிய அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு| Dinamalar

பீஹார் புதிய அமைச்சர்கள் இலாகாக்கள் அறிவிப்பு

Added : நவ 17, 2020
Share
பாட்னா:பீஹாரில், தே.ஜ., கூட்டணி அரசின் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளோரின் இலாகா விபரங்களை, முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.பீஹாரில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பீஹாரின் புதிய முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தொடர்ந்து நான்காவது முறையாக நேற்று முன் தினம் பதவி ஏற்றார்.

பாட்னா:பீஹாரில், தே.ஜ., கூட்டணி அரசின் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளோரின் இலாகா விபரங்களை, முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

பீஹாரில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பீஹாரின் புதிய முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தொடர்ந்து நான்காவது முறையாக நேற்று முன் தினம் பதவி ஏற்றார். அவருடன், பா.ஜ.,வை சேர்ந்த இரு துணை முதல்வர்கள் உட்பட, 14 பேர், அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கான இலாகா விபரங்களை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.

அதில், உள்துறையை தன்வசம் அவர் வைத்துஉள்ளார். துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்கு நிதி, வணிக வரி, சுற்றுச்சூழல் மற்றும் வனம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, நகர் புற வளர்ச்சி ஆகிய துறைகள் வழங்கப்பட்டு உள்ளன.கடந்த ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்த, பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி வகித்த இலாகாக்கள் அனைத்தும், இவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு துணை முதல்வரான ரேணு தேவிக்கு, பஞ்சாயத்து ராஜ், பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் தொழில் துறை ஆகிய இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, புதிய அமைச்சரவை கூட்டம், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X