பொது செய்தி

தமிழ்நாடு

குள்ளகார் அரிசி ரகம் கூடுதல் மகசூல் பெறலாம்

Added : நவ 17, 2020
Share
Advertisement
குள்ளகார் ரக பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தொட்டிகலை கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மற்றும் இயற்கை விவசாயி டி.கே.கார்த்திகேயன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், குள்ளகார் ரக நெல் பயிரிட்டேன். இது, 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய ரகங்களில் ஒன்று.இந்த ரகத்தை பயிரிடும்போது, பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கிறது. குறிப்பாக, பாரம்பரிய ரக

குள்ளகார் ரக பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தொட்டிகலை கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மற்றும் இயற்கை விவசாயி டி.கே.கார்த்திகேயன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், குள்ளகார் ரக நெல் பயிரிட்டேன். இது, 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய ரகங்களில் ஒன்று.இந்த ரகத்தை பயிரிடும்போது, பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கிறது.

குறிப்பாக, பாரம்பரிய ரக நெல்லை பயிரிடும்போது, பிற பயிர்களைவிட, பாரம்பரிய ரக நெல்லில், நோய் தாக்குதல் குறைவாக இருக்கிறது. சில நேரங்களில், நோய் தாக்குதல் தென்பட்டாலும், அமிர்த கரைசலை தெளிக்கும்போது, பயிர் நன்றாக தெளிந்து விடுகிறது.ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டை வரை மகசூல் பெறலாம். பாரம்பரிய ரக நெல் பயிரிடும், பிற விவசாயிகள் எடுக்கும், 12 மூட்டை மகசூலைவிட, இது கூடுதலாக இருக்கிறது. இதற்கு, எங்கள் நிலத்தில், இயற்கையாக மண்புழுக்கள் வசிப்பதால், கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98406 82036

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X