அச்சிறுப்பாக்கம் : அச்சிறுப்பாக்கம் சுற்று வட்டாரத்தில், கனமழைக்கு, பெரும்பாலான பொதுக் குளங்கள் நிரம்பி உள்ளன.
கன மழை காரணமாக, மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.இதில், 2019 - -20ம் ஆண்டில், குடிமராமத்து பணி மேற்கொண்ட ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பில் துார் வாரப்பட்ட மூன்று பொது குளங்களும், கருங்குழி பேரூராட்சியில், ஒன்பது குளங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளதால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வந்துக்கொண்டிருப்பதால், குறிப்பிட்ட சில ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சி தண்டலத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதிதாக அமைத்த குளத்தில், மழை நீர் நிரம்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE