புறம்போக்கில் வசிப்போருக்கு மனை பட்டா வழங்க ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கில் வசிப்போருக்கு மனை பட்டா வழங்க ஆய்வு

Added : நவ 17, 2020
Share
மாமல்லபுரம் : அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு, வீட்டுமனை பட்டா வழங்க, வருவாய் துறையினர் ஆய்வு செய்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், பல்லாயிரம் பேர், அரசு புறம்போக்கு நில பகுதியில் வசிக்கின்றனர். கிராம நத்தம், மேய்க்கால் உள்ளிட்ட புறம்போக்கு நிலத்தில்

மாமல்லபுரம் : அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு, வீட்டுமனை பட்டா வழங்க, வருவாய் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், பல்லாயிரம் பேர், அரசு புறம்போக்கு நில பகுதியில் வசிக்கின்றனர். கிராம நத்தம், மேய்க்கால் உள்ளிட்ட புறம்போக்கு நிலத்தில் வசிப்போர், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க, அரசிடம், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இத்தகைய பகுதியில், ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவோருக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவதாக, அரசு அறிவித்துள்ளது.எனவே, அனைத்து தாலுகா பகுதிகளில், பயனாளிகள் குறித்த விபரங்களை வருவாய் துறையினர், ஆய்வு செய்கின்றனர்.

இதுகுறித்து, இத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு புறம்போக்கில் வசிப்போருக்கு, வீட்டுமனை பட்டா வழங்க, ஆய்வு செய்கிறோம். 10 ஆயிரம் பேருக்கு வழங்க, அரசிடம் பரிந்துரைக்கப்படும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X