ஸ்ரீபெரும்புதுார் : கன மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள, ஸ்ரீபெரும்புதுாரில், 5,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 98 ஏரிகள் உள்ளன. வட கிழக்கு பருவ மழையின் போது, இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால், ஏற்படும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளவும், ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டால், அதை உடனடியாக தடுக்கவும், பொதுப்பணித் துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் மண் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து, பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன் கூறுகையில், ''வட கிழக்கு பருவ மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள, ஸ்ரீபெரும்புதுாரில், 5,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கன மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரிகளின் கரைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE