மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம் ஊராட்சியின், பெரியார் நகர், ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகள்; வாயலுார் ஊராட்சியின், உய்யாலிகுப்பம் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் நீர்பரப்பு பகுதி அருகில் அமைந்து உள்ளன.
பருவமழை, கடல் காற்றழுத்தம், புயல் காலங்களில், கனமழை பெய்யும்போது, கால்வாயில், வெள்ளம் பெருக்கெடுத்து, வசிப்பிட பகுதிகளை சூழ்கிறது. பல நாட்கள், நீர் வடியாமல், இப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர்.நேற்று முன்தின கனமழையால், இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. நீரை வெளியேற்றி, கடலில் விட, கல்பாக்கம் நகரிய முகத்துவாரம் மற்றும் உய்யாலிகுப்பம் பகுதிகளில், கடற்கரை மணல் அடைவு, ஜே.சி.பி., மூலம் அகற்றி, நீரோடை ஏற்படுத்தப்பட்டது. வெள்ளம், கடலுக்கு பாய்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE