காஞ்சிபுரம் : கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 67 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக உள்ளன.நேற்று காலை வரை, காஞ்சிபுரத்தில், 3.5 செ.மீ., ஸ்ரீபெரும்புதுாரில், 2.4 செ.மீ., உத்திரமேரூரில், 7.7 செ.மீ., மற்றும் வாலாஜாபாத்தில், 1.4 செ.மீ., அளவு பதிவாகியுள்ளது.நேற்று காலை முதல் மாலை வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால், மழை பெய்யாமல் வானம் கண்ணாமூச்சி காட்டி வந்தது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 14 ஏரிகள், முழுமையாக நிரம்பின.
இந்நிலையில், பொதுப்பணித் துறை ஊழியர்கள், நேற்று எடுத்த கணக்கெடுப்பில், மொத்தமுள்ள, 908 ஏரிகளில், 67 ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன.தவிர, 127 ஏரிகள், 75 சதவீதமும், 206 ஏரிகள், 50 சதவீதமும், 180 ஏரிகள், 25 சதவீமும், 324 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் நிரம்பியுள்ளது. 4 ஏரிகளில், நீர் எதுவும் நிரப்பாமல் உள்ளதாக, பொதுப்பணித் துறை தெரிவிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE