'டிவி' செய்தி சேனல்களுக்கு நெறிமுறை : மத்திய அரசு மீது அதிருப்தி

Updated : நவ 19, 2020 | Added : நவ 17, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி :'டிவி சேனல்களின் செய்திகளை ஒழுங்குமுறைபடுத்த, தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றன' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்சில், டில்லியில் தப்லிகி ஜமாத் மாநாடு நடந்தது. இதில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், கொரோனா தடுப்பு விதிமுறைகள்
 'டிவி' செய்தி சேனல்கள், நெறிமுறை வகுக்க...உத்தரவு!  மத்திய அரசு , உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

புதுடில்லி :'டிவி சேனல்களின் செய்திகளை ஒழுங்குமுறைபடுத்த, தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றன' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்சில், டில்லியில் தப்லிகி ஜமாத் மாநாடு நடந்தது. இதில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது.


விசாரணை



இந்த மாநாடு வாயிலாக, கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததாக, சில, 'டிவி சேனல்'கள் செய்தி வெளியிட்டன.மத ரீதியான வெறுப்புணர்வை துாண்டும் விதமாக செய்தி வெளியிட்ட டிவி சேனல்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு தரப்பில், கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தப்லிகி ஜமாத் மாநாடு குறித்து, டிவி சேனல்களில் தவறான செய்தி வெளியிடப்படவில்லை' என, விளக்கம் அளிக்கப்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.



நடவடிக்கை



அப்போது, மத்திய அரசு தரப்பில் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், செய்தி வெளியிட்ட, டிவி சேனல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் டிவி செய்திகளை ஒழுங்குமுறைபடுத்துவது குறித்து, விளக்கம் அளிக்கப்படவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே கூறியதாவது:ஒரு இளநிலை அதிகாரியை வைத்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் மத்திய அரசின் போக்கு, நீதிமன்றத்தை அவமதிப்பதை போல் உள்ளது.

உங்கள் இரண்டாவது அறிக்கையிலும், எதற்கும் சரியான விளக்கம் இல்லை. என்.பி.ஏ., எனப்படும், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்திடம், ஒழுங்குமுறை பணியை தர முடியாது.இதற்கென தனியாக ஒழுங்குமுறை அமைப்பு வேண்டும். இல்லையென்றால், உருவாக்குங்கள். உங்களால் முடியாது என்றால், அந்த பணியை வெளி நிறுவனத்திடம் நாங்கள் ஒப்படைத்துக் கொள்கிறோம்.இவ்வாறு, நீதிபதி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-நவ-202021:10:19 IST Report Abuse
Rajagopal இப்போது கும்ப மேளா நடக்க இருக்கிறது. அப்போது லட்சக்கணக்கானவர்கள் ஒன்று கூட போகிறார்கள். ஏதாவது ஊடகம் இதனால் கொரோனா அதிகமாகி விட்டது என்று சொல்லி, அதை நீதி மன்றம் கண்டிக்குமா என்று பார்ப்போம்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
18-நவ-202018:46:33 IST Report Abuse
GANESUN அறிக்கை தயாரிக்க வெளிநாட்டு கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து அதன் செலவையும் கோர்டே ஏற்குமா?
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202016:57:46 IST Report Abuse
Rajan சூசை கண்டி ஜனாதிபதி ஆனா இதெல்லாம் நடக்குமா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X