பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் தவசிக்கு நீளும் உதவிக்கரம்

Added : நவ 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு, நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.கிழக்கு சீமையிலே தொடங்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என, பல படங்களில் நடித்தவர் தவசி. ஆறு மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய அவர், லேசான காயங்களுடன் தப்பினார். தற்போது, உணவு குழாயில் உருவான

சென்னை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு, நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கிழக்கு சீமையிலே தொடங்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என, பல படங்களில் நடித்தவர் தவசி. ஆறு மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய அவர், லேசான காயங்களுடன் தப்பினார். தற்போது, உணவு குழாயில் உருவான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். மதுரையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், டாக்டருமான சரவணனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி, சக நடிகர்களிடம் சிகிச்சை செலவுக்காக உதவும்படி, உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில், பண உதவி அளிக்கப் பட்டது. நடிகர் விஜய்சேதுபதி சார்பில், ஒரு லட்சம் ரூபாய்; நடிகர் சவுந்தரராசா தரப்பில், 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.தவசியின் வங்கி கணக்கு விவரத்தை, பலர் தங்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் அனுப்பி, தவசிக்கு உதவி கோரப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-நவ-202010:07:42 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan விபரம் தெரிந்தால் நாங்களும் உதவுவோம். கணக்கு விபரங்களை தாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X