சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைசூரு விமானத்தில் கோளாறு சென்னையில் தரையிறக்கம்

Added : நவ 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பெல்காம் நகரில் இருந்து மைசூரு சென்ற விமானம், மோசமான வானிலையால், சென்னையில் அவசரமாக தரையிறங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமான பைலட்டின் சாதுர்யத்தால், 52 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கர்நாடகா மாநிலம், பெல்காமிலிருந்து, 'ட்ரூ ஜெட்' விமானம் நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு புறப்பட்டு, 52 பயணியருடன், மைசூருக்கு சென்று
 மைசூரு விமானத்தில் கோளாறு சென்னையில் தரையிறக்கம்

சென்னை:பெல்காம் நகரில் இருந்து மைசூரு சென்ற விமானம், மோசமான வானிலையால், சென்னையில் அவசரமாக தரையிறங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமான பைலட்டின் சாதுர்யத்தால், 52 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடகா மாநிலம், பெல்காமிலிருந்து, 'ட்ரூ ஜெட்' விமானம் நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு புறப்பட்டு, 52 பயணியருடன், மைசூருக்கு சென்று கொண்டிருந்தது.மைசூரில் நிலவிய மோசமான வானிலையால், அந்த விமானம் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் தரையிறங்க வந்த போது, விமானத்தில், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
விமான பைலட், இதுகுறித்து சென்னை விமான கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு தகவல் கொடுத்தார். அந்த விமானம், சென்னையில் அவசரமாக தரையிறக்கம் அனுமதி அளிக்கப் பட்டது.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், சென்னையில் பத்திரமாக தரையிறங்கி, முதலாவது ஓடுபாதையிலேயே நின்றது. விமான பயணியர் அனைவரும், விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர்.

விமானம் பழுதடைந்து, ஓடுபாதையில் நின்று விட்டதால், அதற்குப் பின் வந்த விமானங்களால், இங்கு தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டாவது ஓடுபாதையை பயன்படுத்தி, விமான சேவைகள் நடந்தன.பழுதடைந்த விமானம், இழுவை வண்டிகள் வாயிலாக, விமான முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த பயணியர் அனைவரும் நேற்று காலை, பெங்களூரு சென்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான பைலட், உரிய நேரத்தில் இயந்திர பழுதை கண்டறிந்ததால், விமான விபத்து தவிர்க்கப் பட்டு, 52 பயணியர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.இந்த சம்பவம் குறித்து, விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குனகரமான - டி.ஜி.சி.ஏ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-நவ-202009:41:47 IST Report Abuse
JeevaKiran அந்த பைலட்டுக்கு ஒரு பெரிய சல்யூட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X