அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மீது ஜெயகுமார் பாய்ச்சல்

Added : நவ 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:''சட்டம் - ஒழுங்கு குறித்து பேச, தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதால், முதலீடுகள் அதிகம் வருகின்றன. குற்றங்கள் நடக்காமல், விழிப்போடு பாதுகாப்பது அரசின் கடமை. குற்றங்கள் நடந்தால், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தருவதும் அரசின் கடமை; அதை அரசு
 தி.மு.க., மீது  ஜெயகுமார் பாய்ச்சல்

சென்னை:''சட்டம் - ஒழுங்கு குறித்து பேச, தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதால், முதலீடுகள் அதிகம் வருகின்றன. குற்றங்கள் நடக்காமல், விழிப்போடு பாதுகாப்பது அரசின் கடமை. குற்றங்கள் நடந்தால், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தருவதும் அரசின் கடமை; அதை அரசு செய்யும்.கடந்த காலங்களில், தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.

தற்போது, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., இதயவர்மன் வீட்டில், ஆயுத குவியலை கைப்பற்றினர். கள்ளத்துப்பாக்கி தயாரித்து விற்கும் கும்பலாக, தி.மு.க., உள்ளது. சட்டம் - ஒழுங்கு குறித்து பேச, அவர்களுக்கு அருகதை இல்லை.தமிழகத்திற்கு, யார் வேண்டுமானாலும் வரட்டும்; சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அமித் ஷா அவர்கள் கட்சியை வளர்க்க, தமிழகம் வருகிறார். அவர்கள் தற்போது, எங்கள் கூட்டணியில் உள்ளனர். எனவே, அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து பேசுவதில் தவறில்லை.

தி.மு.க.,வின் ஆட்சி முறை, விசாரணை இல்லாமல், முன் யோசனை இல்லாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என, இருந்தது. இயற்கை நியதியின்படி, யாராக இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். துணை வேந்தர் உட்பட எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது புகார் வந்தால், முகாந்திரம் உள்ளதா என, விசாரிக்க வேண்டும்.அந்த அடிப்படையில், விதிகளின்படி, சுரப்பா விவகாரத்தில், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு தரும் அறிக்கை மீது, அரசு மேல் நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
18-நவ-202013:16:34 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் பாவம் கொமாரு எஜமான் மிரட்ட வார்னே என்கிற பயம் ஒரு MLA க்கோட இல்லாத ஒருத்தன் வெட்கம் இல்லம இவர்களை மிரட்டி கொண்டு இருக்கிறான் அதை கேட்க வக்கில்லை
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-நவ-202009:55:05 IST Report Abuse
RajanRajan வுடாதீங்கப்பா மாறி மாறி அடிச்சுக்கோங்க. சட்டம் ஒழுங்குக்கும் திராவிட கட்சிகளுக்கும் என்னய்யா சம்பந்தம்னு மக்கள் பேசிக்கிறாங்கப்பா. கூடவே இந்த இரு பிரியாணிக்கடை டாஸ்மாக்குகளிடம் இருந்து என்னிக்கு விடுதலைன்னு மக்கள் புலம்புறாங்க. இது புரியாம ஆளாளுக்கு துண்டு விரிச்சு விளையாடுறீங்களேப்பா.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
18-நவ-202011:27:38 IST Report Abuse
Srinivasவேல் யாத்திரை என்ற பெயரில் ஒரு பக்கோடா காவல் துறை உயர் அதிகாரியை வெறியுடன் தாக்குவதை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்தனர். தாக்கிய பக்கோடா பெயருக்கு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட செய்தியையும் பார்த்தனர் என்பது உனக்கு தெரியாதா? இதைத்தானே உன் பக்கோடா கும்பல் விரும்புகிறது. நான்கு ஆண்டுகளாக அடிமைகளின் அராஜகங்களை பார்த்துக்கொண்டிருந்து விட்டு இப்போது மட்டும் என்ன அறிக்கை?...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
18-நவ-202014:08:51 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சிங்கிகள் VEL யாத்திரை என்று கிளம்பி எப்படி டுப்ளிக் மாதிரி கிளம்பி விட்டார்கள், இவைகளால் கண்டிப்பாக அதிகம் ஆக போகுது, அங்கே தப்லீக் இங்கே இவர்கள் எல்லாம் மத சாயம் தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X