ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பருவமழை துவங்கிய நிலையில் கனமழை இன்றி சாரல் மழையாக பெய்து வருவதால், கண்மாய், குளங்கள் உள்ளிட்டவைகளில் இதுவரை தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் இன்றி கண்மாய் உட்பகுதி மைதானமாக காட்சியளிக்கிறது. இந்த கண்மாயில் ஆண்டுதோறும் மழை காலத்தில் தேக்கப்படும் 1,205 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம், பயன்பெறும் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலம், இந்த ஆண்டில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் கீழ் உள்ள 72 சிறிய கண்மாய்களிலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE