திருத்தணி : மூன்று ஊராட்சிகளில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மக்கள் திட்டமிடல் இயக்க உறுப்பினர்களுக்கு, பயிற்சி, நேற்று துவக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை, அலுமேலு மங்காபுரம், புச்சிரெட்டிப்பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த இயக்கத்தில், ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒன்பது பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டு, வளர்ச்சி பணிகள் என்ன செய்ய வேண்டும் என, தீர்மானிக்கிறது.அந்த குழுவில், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர், மகளிர் சுயஉதவிக் குழு தலைவி, இரண்டு இளைஞர்கள், தன்னார்வலர் ஆகியோர் இருப்பர்.
இவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் ரவி தலைமையில் நேற்று நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு வரவேற்றார். பயிற்சியை ஒன்றிய சேர்மன் தங்கதனம் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, இத்திட்டம் மற்றும் ஊராட்சிகளில் தேர்வு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து, மாநில பயிற்சியாளர்கள் கனிதேவி, தீபா ஆகியோர் பயிற்சி அளித்தனர். மொத்தம், 27 உறுப்பினர்கள் உட்பட ஒன்றிய அலுவலக அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE