சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ள பகுதிகளை காணாத அதிகாரிகளால் அதிருப்தி

Added : நவ 17, 2020
Share
Advertisement
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு, செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும், தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்வது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஏரியில், 3.64 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.பரவலாக பெய்யும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு, செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும், தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்வது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஏரியில், 3.64 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.பரவலாக பெய்யும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வரத்து தொடர்வதால், விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அச்சப்பட தேவையில்லை இதனால், கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியை, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அசோகன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது பேட்டியளித்த அசோகன், ''செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழியவில்லை. மழை நின்றதால், நீர்வரத்து குறைந்து உள்ளது. அடையாறு ஆற்றை அகல்படுத்தி, ஆழப்படுத்தி வைத்துள்ளதால், வெள்ள அபாயம் இருக்காது. ''ஏரி நிரம்பினால், உபரிநீரை எளிதாக வெளியேற்றுவோம். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.அதே நேரத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில், பல்வேறு நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், மூன்று மாவட்ட மக்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

பிரச்னை ஏற்பட்டிருக்காதுநீர்வழித்தடங்களை முறையாக துார் வாரி இருந்தால், இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது.செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் ஆய்வு செய்வதில் காட்டும் அக்கறையை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X