சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாக்ஸ்... போலீஸ் பாதுகாப்பு!

Added : நவ 17, 2020
Share
Advertisement
செம்பரம்பாக்கம் ஏரிக்குபோலீஸ் பாதுகாப்பு!செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், 24 அடி என்றாலும், பாதுகாப்பு கருதி, 22 அடியை தொட்டவுடன், உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது தொடர்மழை காரணமாக, அணையின் நீர் மட்டம், 21 அடி கடந்து உயர்ந்து வருகிறது. இதனால், ஏரி எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. ஏரியை திறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில், பழைய

செம்பரம்பாக்கம் ஏரிக்குபோலீஸ் பாதுகாப்பு!செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், 24 அடி என்றாலும், பாதுகாப்பு கருதி, 22 அடியை தொட்டவுடன், உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது தொடர்மழை காரணமாக, அணையின் நீர் மட்டம், 21 அடி கடந்து உயர்ந்து வருகிறது. இதனால், ஏரி எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. ஏரியை திறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில், பழைய வீடியோக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால், ஏரிக்கரையில் மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். சிலர், ஷட்டர் உள்ள பகுதிகளில் வலம் வருகின்றனர். பாதுகாப்பு கருதி, ஏரிக்கரை மீது செல்ல, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தேவையின்றி சுற்றி திரிபவர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X