அரசியல் செய்தி

தமிழ்நாடு

பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார்

Updated : நவ 19, 2020 | Added : நவ 17, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு, வடகிழக்கு பருவமழை காலத்தில்,அதிக மழை கிடைக்கிறது. மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம் கிடைக்கிறது. குறைவான மழைஇந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை,
பருவ மழை, முன்னெச்சரிக்கை, அரசு, தயார்

சென்னை:''தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு, வடகிழக்கு பருவமழை காலத்தில்,அதிக மழை கிடைக்கிறது. மாநிலத்தின் இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம் கிடைக்கிறது.


குறைவான மழைஇந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 28ல் துவங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை, இயல்பான மழை, 287.9 மி.மீ., பெய்ய வேண்டும்; ஆனால், 180.7 மி.மீ., மழை மட்டுமே பெய்து உள்ளது. இது, இயல்பான மழை அளவை விட, 37 சதவீதம் குறைவு.சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், விருதுநகர் மாவட்டங்களில், இயல்பான அளவும், மற்ற மாவட்டங்களில், இயல்பை விட குறைவான அளவும், மழை பெய்துள்ளது.

வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில், 4,133 பகுதிகள், மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என, கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 321 பகுதிகள், மிகவும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை.மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை, மாற்று இடங்களில் தங்கவைக்க, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட, 4,713 தங்கும் மையங்கள், தயார் நிலையில் உள்ளன.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கூடுதல் தற்காலிக தங்கும் மையங்களாக, பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் என, 4,680 தங்கும் இடங்கள், தயார் நிலையில் உள்ளன.இவற்றை நிர்வகிக்க, 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில், உடனடியாக செயலாற்ற, 43 ஆயிரத்து, 409 முதல்நிலை மீட்பாளர்கள், ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில், 14 ஆயிரத்து, 232 பேர் பெண்கள்.கால்நடைகளை பாதுகாக்க, கூடுதலாக, 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் உள்ளனர்.

பேரிடர் காலங்களில், காற்றில் விழும் மரங்களை அகற்ற, மற்ற காலங்களில், மரங்களை நட்டு வளர்க்க, 9,909 முதல்நிலை மீட்பாளர்கள், ஆயத்தமாக உள்ளனர்.இது தவிர, பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்குவரை காப்பாற்ற, நீச்சல் வீரர்களையும் கண்டறிந்து, பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.


தேசிய பேரிடர் மீட்பு படைமாவட்டங்களில், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 'பொக்லைன்' இயந்திரங்கள், 2,115 'ஜெனரேட்டர்'கள், 483 பம்புகள், தயாராக உள்ளன.தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரிடம், பயிற்சி பெற்ற, 5,505 காவலர்கள், அனைத்து மாவட்டங்களிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர, ஊர் காவல் படையை சேர்ந்த, 691 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையின் கீழ், 4,699 வீரர்களுக்கும், 9,859 தன்னார்வலர்களுக்கும், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில், தகவல் தொடர்புக்காக, மாநில கட்டுப்பாட்டு மையம், மாவட்ட கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் தொலைபேசி எண்கள் முறையே, 1070, 1077.இவ்வாறு, அவர் கூறினார்.


சுற்றறிக்கை கையேடு!

புயல் மற்றும் மழையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வெளியிடப்பட்ட சுற்றறிக்கை; இடி மற்றும் மின்னல் மேலாண்மைக்கான செயல் திட்டம் -ஆகியவற்றின் தொகுப்பு கையேடு, அவசர கால தொலைபேசி கையேடு ஆகியவற்றை, அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-நவ-202020:16:20 IST Report Abuse
RajanRajan குரானா வேட்டையாடி முடிச்சாச்சு. அடுத்தப்புலே பருவமழை வேட்டையை துவங்கிட வேண்டியது தான்..பூஸ் புஸ
Rate this:
Cancel
18-நவ-202009:34:22 IST Report Abuse
ருத்ரா வெள்ளமும் கழிவுநீரும் கலந்து ஓடும் தமிழ் நாடு. அரையும் குறையுமாய் தூர்வாரப்பட்ட நீர் நிலைகள். அடுத்த வருட பருவமழைக்கு இப்போதே தயார் நிலை என்கிறீர்களா? great.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202005:07:55 IST Report Abuse
Mani . V பருவ மழையை எதிர்கொள்ள பண்டம், பாத்திரத்துடன் அரசு தயார்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
18-நவ-202011:19:11 IST Report Abuse
Srinivasஇதுதானே கடைசி பொய்க்கணக்கு. ஒரு சில ஆயிரம் செலவிற்கு பல ஆயிரம் கோடிகள் கணக்கு எழுதி சுருட்டப்படும் என்பதை பாமரனும் அறிவான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X