அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ. 67, 378 கோடி திட்டங்கள் அடிக்கல் நாட்டுகிறார் அமித் ஷா

Added : நவ 17, 2020
Share
Advertisement
சென்னை:சென்னைக்கு, ௨௧ம் தேதி வரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டுகிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 21ம் தேதி சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கில், அன்று மாலை, 4:30மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடக்கும், அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில், 380 கோடி

சென்னை:சென்னைக்கு, ௨௧ம் தேதி வரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 21ம் தேதி சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கில், அன்று மாலை, 4:30மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடக்கும், அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில், 380 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு, அமித் ஷா அர்ப்பணிக்கிறார்.

மேலும், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் மதிப்பிலான, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகள்; கோவை அவிநாசி சாலையில், 1,620 கோடி ரூபாயில் அமைக்க உள்ள, உயர்மட்ட சாலை திட்டம்.கரூர் மாவட்டம், நஞ்சை புகலுாரில், 406 கோடி ரூபாயில், காவிரி ஆற்றின் குறுக்கே அமைய உள்ள கதவணை திட்டம்; சென்னை வர்த்த மையத்தை, 309 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யும் திட்டம்.

மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், வல்லுாரில், 900 கோடி ரூபாயில் அமைய உள்ள பெட்ரோலிய முனையம், மணலி ஆமுல்லைவாயலில், 1,400 கோடி ரூபாய் மதிப்பில், 'லுாப் பிளான்ட்' அமைத்தல். காமராஜர் துறைமுகத்தில், 900 கோடி ரூபாயில், புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு, அமித் ஷா அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்ற உள்ளார்.விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X