அன்னூர்:அன்னுார் அடுத்த பொகலுாரில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் சார்பில், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
'பண்ணை குட்டை அமைத்தால், மழை நீரை சேமிக்கலாம்' என, பயிற்சி வகுப்பில், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், பொகலூரில், விவசாயிகளுக்கு, உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''இத்திட்டத்தில், உழவு மானியம் வழங்கப்படுகிறது. குழுவாக செயல்பட்டால், அரசின் மானியம் பெறலாம். சொட்டுநீர் பாசனம் அமைத்தால் நீரை சேமிக்கலாம்,'' என்றார்.வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுரேஷ்குமார் பேசுகையில், ''தோட்டத்தில் வாய்ப்புள்ள இடத்தில், பண்ணை குட்டை அமைக்க வேண்டும். இதன் வாயிலாக மழை நீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்தி, பயன்பெறலாம். நிலப்போர்வை அமைத்தல், சிறு குழிகள் வெட்டுதல் ஆகியவற்றால் நீர்ப் பற்றாக்குறையைப் போக்கலாம். விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளிவிட்டு நடுதல், களை நிர்வாகம், பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றால், அதிக விளைச்சல் பெறலாம்,'' என்றார். வேளாண் அலுவலர் திவ்யா பேசுகையில், ''அரசு மானியத்தில், பயிர் காப்பீடு உள்ளது. இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது,'' என்றார்.துணை வேளாண் அலுவலர் முருகன் விதைப்பண்ணை திட்டம் குறித்து விளக்கினார். பயிற்சி வகுப்பில் பொகலூர் விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE