பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வர் குடும்பத்தினருடன் திருப்பதியில் வழிபாடு

Added : நவ 17, 2020
Share
Advertisement
திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில், தமிழக முதல்வர், பழனிசாமி குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.ஏழுமலையானை வழிபட, நேற்று முன்தினம் மாலை தமிழக முதல்வர், பழனிசாமி குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் மாலை திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். இதன்பின் முதல்வரை, தேவஸ்தான செயல் அதிகாரி

திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில், தமிழக முதல்வர், பழனிசாமி குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.

ஏழுமலையானை வழிபட, நேற்று முன்தினம் மாலை தமிழக முதல்வர், பழனிசாமி குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் மாலை திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். இதன்பின் முதல்வரை, தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி, ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, சேஷ வஸ்திரம் அணிவித்து தீர்த்தம், லட்டு, வடை, ஏழுமலையான் திருவுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

முதல்வர், பழனிசாமி திருமலை வரும்போது, இங்குள்ள வராக சுவாமி மற்றும் ஹயகிரிவர் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம்.தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏழுமலையான் கோவிலைத் தவிர, இதர சன்னிதிகள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

இந்நிலையில், 'வராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும்' என, தமிழக முதல்வர் தெரிவித்ததை அடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகளிடம், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினார். இதையடுத்து, வராக சுவாமி கோவிலிலும், ஹயக்ரீவர் கோவிலிலும் தரிசனம் செய்ய, முதல்வருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X