சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற பெண்கள்: போலீஸ் அதிர்ச்சி

Added : நவ 17, 2020
Share
Advertisement
சூலுார்:சூலுார் அருகே கஞ்சா விற்ற, வடமாநில பெண்கள் இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூலுார் அருகே முத்துக்கவுண்டன் புதுார் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான பேர் பணி புரிகின்றனர்.சுற்றுவட்டார கிராமங்களில் குடியிருக்கும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்கள்

சூலுார்:சூலுார் அருகே கஞ்சா விற்ற, வடமாநில பெண்கள் இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூலுார் அருகே முத்துக்கவுண்டன் புதுார் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான பேர் பணி புரிகின்றனர்.சுற்றுவட்டார கிராமங்களில் குடியிருக்கும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்கும் நபர்கள் சுற்றுப்பகுதிகளில் திரிவது வழக்கம். இந்நிலையில், மு.க.புதுார் ரோட்டில் உள்ள தனியார் பவுண்டரி அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ராஜ் குமார் தலைமையிலான போலீசார் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, இரு பெண்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். சந்தேகப்பட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தனர்.இரு பெண்களும், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபிதேவி, 34, விந்து தேவி,40 என்பதும், நேற்று முன்தினம் இப்பகுதிக்கு வந்து வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிந்தது.கஞ்சா விற்பதை தொழிலாக கொண்டிருக்கும் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 1 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X