பொது செய்தி

தமிழ்நாடு

தூர் எடுத்த ஓடையில் மழை வெள்ளம்;தன்னார்வலர்கள் முயற்சிக்கு பலன்

Added : நவ 17, 2020
Share
Advertisement
கோவில்பாளையம்:கீரணத்தம் ஓடையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மழை நீர் வரத்து துவங்கியது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில், அதிக அளவில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை ஒட்டி மழை நீர் செல்லும் ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், புதர் மண்டி, காடு போல் இருந்தது. சுற்று வட்டார குடியிருப்புகளில் இருந்தும் குப்பைகள் ஓடையில்
 தூர் எடுத்த ஓடையில் மழை வெள்ளம்;தன்னார்வலர்கள் முயற்சிக்கு பலன்

கோவில்பாளையம்:கீரணத்தம் ஓடையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மழை நீர் வரத்து துவங்கியது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில், அதிக அளவில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை ஒட்டி மழை நீர் செல்லும் ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், புதர் மண்டி, காடு போல் இருந்தது. சுற்று வட்டார குடியிருப்புகளில் இருந்தும் குப்பைகள் ஓடையில் கொட்டப்பட்டன.இந்நிலையில், கீரணத்தம் நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்பினர், ஓடையை தூர் வாருவதற்கு முயற்சி எடுத்தனர். அதற்கு, மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் அனுமதி அளித்தனர். பாஷ் நிறுவனம் மற்றும் ராக் அமைப்பின் ஒத்துழைப்போடு, ஒரு மாதமாக இயந்திரங்கள் மூலம் ஓடையில் உள்ள குப்பைகள், மண்மேடுகள், செடிகள், புதர்களை அகற்றினர். இரண்டு கி.மீ., தூரத்திற்கு தூர்வாரப்பட்டது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் பெய்த கன மழையில், 5 ஆண்டுக்குப் பிறகு கீரணத்தம் ஓடையில் மழைநீர் சென்றது. இந்த மழைநீர், 2 கி.மீ., தூரம் பயணித்து, சூரி பள்ளத்தில் இணைந்து, காரைக்குட்டை வழியாக கோவில்பாளையத்தில் உள்ள 145 ஏக்கர் பரப்பளவு காளிங்கராயன் குளத்திற்கு சென்று சேர்ந்தது. மண் மூடிக்கிடந்த ஓடையை துார் எடுத்ததன் பயனாக, மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளதை கண்ட கோவில்பாளையம், கீரணத்தம் பொதுமக்களும், தன்னார்வலர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X