பயங்கரவாதத்தை ஆதரிப்பதா: பிரதமர் ஆவேசம்

Added : நவ 17, 2020
Share
Advertisement
புதுடில்லி:'பயங்கரவாதத்துக்கு உதவியும், ஆதரவும் அளிக்கும் நாடுகளை, குற்றவாளிகளாக கருத வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி, 'பிரிக்ஸ்' மாநாட்டில் தெரிவித்தார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டை, இந்த ஆண்டு ரஷ்யா நடத்துகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த மாநாட்டுக்கு, ரஷ்ய

புதுடில்லி:'பயங்கரவாதத்துக்கு உதவியும், ஆதரவும் அளிக்கும் நாடுகளை, குற்றவாளிகளாக கருத வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி, 'பிரிக்ஸ்' மாநாட்டில் தெரிவித்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டை, இந்த ஆண்டு ரஷ்யா நடத்துகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த மாநாட்டுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமை வகித்தார்.

இதில், பிரதமர் பேசியதாவது:பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், உலகின் மக்கள் தொகையில், 42 சதவீதத்தை வைத்துள்ளன. எனவே, கொரோனா பாதிப்புக்கு பிறகான பொருளாதார சீரமைப்பில், பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.'ஆத்மநிர்பார் பாரத்'இந்தியாவை, சுயசார்புள்ள நாடாக உருவாக்கும் நோக்கில், 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பொருளாதார மீட்சிக்கு, இத்திட்டம் வலு சேர்ப்பதாக இருக்கும்.பல சர்வதேச அமைப்புகள், காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளாமல், காலாவதியான மனநிலையுடன் பணியாற்றுவதால், சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அதன் பன்முகத் தன்மை மீது, கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் தேவை.

இன்று, உலகம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாக, பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவும் மற்றும் ஆதரிக்கும் நாடுகளை, குற்றவாளிகளாக கருத வேண்டும்.பயங்கரவாதத்துக்கு எதிரான நிலையில், பிரிக்ஸ் அமைப்பு எடுத்துள்ள இறுதி முடிவு, பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு, இந்தியாவின் தலைமையில் இந்த மாநாடு நடக்கும் போது, இந்த பணி முன்னோக்கி எடுத்து செல்லப்படும்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.


கறுப்பு ஆடுகள்

மோடியின் பேச்சை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆமோதித்தார். 'பயங்கரவாதம் மற்றும் கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், சில நாடுகள் கறுப்பு ஆடுகளாக செயல்படுகின்றன. அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது' என, அவர் தெரிவித்தார்.மேலும், ''ரஷ்ய தயாரிப்பான, 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பு மருந்து, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும்,'' என்றார்.

சீன அதிபர் ஷீ ஜிங்பிங் பேசுகையில், ''கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில், இந்தியா உள்ளிட்ட, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்,'' என்றார்.


'முதலீடுக்கு ஏற்ற இடம் இந்தியா'



டில்லியில் நடந்த, 'ப்ளூம்பர்க்' புதிய பொருளாதார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலகத்தை, நாம் கட்டியெழுப்பியாக வேண்டும். மனநிலை, செயல்முறை மற்றும் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தாமல், இது சாத்தியமில்லை. இந்தியா மற்றும் சில ஆப்ரிக்க நாடுகள், அடுத்த, 20 ஆண்டுகளில், நகரமயமாக்கலில் மிக பெரிய அலையை சந்திக்கப் போகின்றன.எனவே, நகரமயமாக்கல், புதுமை மற்றும் நிலையான தீர்வுகளில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, மிகச்சிறந்த இடமாக இந்தியா திகழப்போகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X