பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் உயிரிழப்பு அதிகரித்தும் அலட்சியம் : பொதுப்பணித்துறை மீது மக்கள் காட்டம்

Added : நவ 17, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், உயிரிழப்பு ஏற்படும், ஆற்றுச்சுழல் பகுதியில், வேலி அமைத்து, கண்காணிப்புக்கு தற்காலிக பணியாளர்களை பொதுப்பணித்துறையினர் நியமிக்க வேண்டும்.மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும், சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், பிரசித்தி பெற்ற கோவில்கள், அணைகள், பகல் நேரத்தில் உலா
 ஆற்றில் உயிரிழப்பு அதிகரித்தும் அலட்சியம் : பொதுப்பணித்துறை மீது மக்கள் காட்டம்

வால்பாறை:வால்பாறையில், உயிரிழப்பு ஏற்படும், ஆற்றுச்சுழல் பகுதியில், வேலி அமைத்து, கண்காணிப்புக்கு தற்காலிக பணியாளர்களை பொதுப்பணித்துறையினர் நியமிக்க வேண்டும்.மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும், சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், பிரசித்தி பெற்ற கோவில்கள், அணைகள், பகல் நேரத்தில் உலா வரும் வனவிலங்குகள், ஆழியாறில் இருந்து துவங்கும் மலைப்பாதை போன்றவை சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகள், 3 கி.மீ., தொலைவில் உள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்த ஆற்றின் ஒரு பகுதியில் நீர்சுழல் உள்ளது. அந்த சுழலில், சிக்கி, இதுவரை, 20 க்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் பலியாகியுள்ளனர்.கடந்த, 14ம் தேதி திருப்பூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் நீர்சுழலில் சிக்கி பலியானார். தொடர்ந்து இது போன்ற பலி நடப்பதால், வால்பாறை மக்கள் கவலையடைந்துள்ளனர்.இதனிடையே, 'நீர்சுழல் உள்ள பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது,' என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையை, கண்டுகொள்ளாமல், ஆபத்தான நீர்சுழல்நிறைந்த பகுதியில் குளிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் ஆபத்து நிறைந்த பகுதியில் மட்டும் யாரும் நுழையாதபடி தடுப்புக்கம்பி அமைக்க வேண்டும். அத்துமீறி செல்பவர்களை கண்காணித்து தடுக்கவும், அபராதம் விதிக்கவும், தற்காலிக பணியாளர்களை நியமிக்க, அலட்சியத்தை கைவிட்டு, பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயிரிழப்புகள் தொடர்கதையாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X