உடுமலை:உடுமலை, இரண்டாம் கிளை நுாலகத்தின் சார்பில், இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு நடக்கிறது.இந்நுாலகம் மற்றும் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை இணைந்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, பல மாதங்களாக, பயிற்சி வகுப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.சிலம்ப பயிற்சி வகுப்பு, மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும், ஞாயிறு காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை இப்பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சியில் இணைய ஆர்வமுள்ளவர்கள், நுாலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நுாலகர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE