அரசு பஸ் இயக்கப்படாததால் கிராமங்களில் மக்கள் தவிப்பு

Added : நவ 17, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கடத்துாருக்கு, கடந்த வாரத்திலிருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என புகார் எழுந்துள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளுக்காக, உடுமலை, கணியூர், மடத்துக்குளம், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதுதவிர, இங்கு போதிய
 அரசு பஸ் இயக்கப்படாததால் கிராமங்களில் மக்கள் தவிப்பு

மடத்துக்குளம்:திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கடத்துாருக்கு, கடந்த வாரத்திலிருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என புகார் எழுந்துள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளுக்காக, உடுமலை, கணியூர், மடத்துக்குளம், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதுதவிர, இங்கு போதிய மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால், நோயாளிகள், அருகிலுள்ள நகரங்களுக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த தேவைகளுக்காக, பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பல நாட்களாக கடத்துாருக்கு இயக்கப்படாததால், மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.இது குறித்து கடத்துார் ஊராட்சித்தலைவர் கமலவேணி கூறுகையில், ''புதுார்மடம் பகுதியில் உள்ள தார் ரோட்டில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக கடத்துாருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போதும் அதே வழித்தடத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.உடுமலை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'நவ., 7 முதல் 27ம் தேதி வரை கணியூர் பேரூராட்சி ரோட்டில் அரசு பஸ்கள் இயக்க வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில், எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதனால் இயக்கப்படவில்லை. புதுார்மடம் பகுதியிலுள்ள ரோட்டை புதுப்பித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுத்தால் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X