திண்டிவனம் : திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையம் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்- மயிலம் ரோட்டில், மேம்பாலத்தையொட்டி டவுன் போலீஸ் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. போலீஸ் நிலையம் அருகே உள்ள தேசியநெடுஞ்சாலையின் குறுக்கே ரோடு டிவைடர் போடப்பட்டது. டிவைடர் குறுக்கே வாகனங்கள் வருவதற்கு இரண்டு வழி உள்ளது.
இதனால் எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்கின்றதா அல்லது மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்திற்கு வருகிறதா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் டவுன் போலீஸ் நிலையம் அருகே வாகன விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது.கடந்த 15ம் தேதி இரவு 7.30 அளவில் போலீஸ் நிலையம் எதிரிலுள்ள சாலையில், இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், சுரேந்தர், 21; என்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் நிலையம் அருகிலுள்ள ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், டவுன் டி.எஸ்.பி.,கணேசன், இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர் .முதற்கட்டமாக, ரோடு டிவைடர் பகுதியில், வாகனங்கள செல்வதற்கு வழியை, பேரி கார்டு வைத்து தடுத்தனர்.
திண்டிவனம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சூர்யா ஆகியோருடன் டி.எஸ்.பி., ஆலோசனை நடத்தியதின் பேரில், மயிலம் ரோட்டில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE