திண்டிவனம் : திண்டிவனம் அருகே கருவம்பாக்கத்திலுள்ள ஸ்ரீதரம் சந்த் ஜெயின் பள்ளி 'புதுமை மற்றும் சிறந்த கிராமப்புற கல்விக்கான சான்றிதழ்' பெற்றுள்ளது.
திண்டிவனம் அருகே கருவம்பாக்கத்திலுள்ள ஸ்ரீதரம் சந்த் ஜெயின் பள்ளிEDULEADERS SUMMIT LEADERSHIP AWARD - 2020'வழங்கும் மிகச் சிறந்த சான்றிதழான 'புதுமை மற்றும் சிறந்த கிராமப்புற கல்விக்கான சான்றிதழை பெற்றுள்ளது.
ஸ்ரீதரம் சந்த் ஜெயின் பள்ளி, யோகா தினத்தை முன்னிட்டு சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்து உலக சாதனை படைத்தல், சுதந்திர தின விழா போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள், வித்யாரம்பம், மஞ்சள் தின கொண்டாட்டம், உணவு திருவிழா மற்றும் சபை நாகரிக நிகழ்ச்சி, நண்பர்கள் தின கொண்டாட்டம், சமையல்.விளையாட்டு, நிகரில்லா பெற்றோர் அரவணைப்பு, இணையவழிசுற்றுலா, Eco -club போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதால், பள்ளிக்கு 'புதுமை மற்றும் சிறந்த கிராமப்புற கல்விக்கான சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குனர் அனுராக்,பள்ளி முதல்வர் திரு.ஜெகன் ஆகியோர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE