விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருந்த மாற்றுத்திறனாளியை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 70: மாற்றுத்திறனாளி.இவர் தனது இடத்தை வேறு ஒரு நபருக்கு மாற்றி பட்டா கொடுத்துள்ளதை எதிர்த்து தனக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோருக்கு கடந்த ஓராண்டாக முறையிட்டு வருகிறார்.
இவரது மனுவை விசாரித்த ஆர்.டி.ஓ., இவரது பெயரில் பட்டா வழங்க உத்திரவிட்டும், சிலர் தடுத்து வருவதாக கூறி நேற்று காலை ராஜேந்திரன் , விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்து தரையில் அமர்ந்தார்.தகவலறிந்த தாசில்தார் தமிழ்செல்வி, மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேலு, ஏட்டு சண்முகம்ஆகியோர் அவரை அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர் .
மனு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் ராஜேந்திரன் சமாதானமடைந்து தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE