பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளுக்கு வீடுகள் விரைவில் வழங்க திட்டம்

Added : நவ 17, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா வடக்குகண்ணாடிப்புத்தூரில் கட்டப்படும், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அடுத்த ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.குடிசை மாற்றுவாரியம் வாயிலாக, 156 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி மடத்துக்குளம் அருகே வடக்கு கண்ணாடிப்புத்துாரில் நடக்கிறது. இரண்டு ஏக்கர் நிலத்தில், 13 கோடி ரூபாய் மதிப்பில்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா வடக்குகண்ணாடிப்புத்தூரில் கட்டப்படும், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அடுத்த ஆண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.குடிசை மாற்றுவாரியம் வாயிலாக, 156 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி மடத்துக்குளம் அருகே வடக்கு கண்ணாடிப்புத்துாரில் நடக்கிறது. இரண்டு ஏக்கர் நிலத்தில், 13 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கியது.தரைத்தளம், இரண்டு மேல் தளங்கள் அமைப்பில் இந்த வீடுகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும், 400 அடி சதுர பரப்பில் படுக்கையறை, சமையலறை, கழிப்பிடம், ஹால், வாசல் கட்டமைப்பு கொண்டதாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.பணிகள் தொடங்கி பல மாதங்கள் கடந்த நிலையில், தற்போது, நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, குடிசை மாற்று வாரியத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X