பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுங்கம் முதல் ஆனைமலை செல்லும் ரோட்டில், விபத்துகளை தடுக்க மரங்களில், 'ரிப்ளெக்டிங் பிளேட்' ஒட்டப்பட்டது.பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு; அம்பராம்பாளையம் - வளந்தாயமரம் ரோட்டில் இருபுறங்களிலும் மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. ஏற்ற இறக்கமாகவும்; வளைவுகள் மிகுந்த சாலைகளாகவும் உள்ளன.வாகனங்கள் அதிகளவு செல்லும் ரோட்டில் விபத்துகளை கட்டுப்படுத்த மரங்களில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 'ரிப்ளெக்டிங் பிளேட்' ஒட்டும் பணி கடந்த இரண்டு மாதத்துக்கு முன் வளந்தாயமரம் ரோட்டில் மேற்கொள்ளப்பட்டது.இதே போல், அம்பராம்பாளையம் சுங்கம் முதல் ஆனைமலை செல்லும் ரோட்டில் தாத்துார் பிரிவு வரை விபத்துகளை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 'ரிப்ளெக்டிங் பிளேட்' (ஒளி பிரதிபலிப்பான்) மரங்களில் ஒட்டும் பணி நேற்று நடந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.வட்டார போக்குவரத்து துறையினர் கூறியதாவது:பொள்ளாச்சி பகுதியில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அம்பராம்பாளையம் சுங்கம் முதல் ஆனைமலை ரோடு தாத்துார் பிரிவு வரை ரோட்டின் இருபுறங்களிலும், 'ரிப்ளெக்டிங் பிளேட்' ஒட்டப்பட்டுள்ளன.மரங்கள் நிறைந்த சாலை மற்றும் இருள் சூழ்ந்த இடமாக உள்ளதுடன், ஏற்ற, இறக்கமாகவும், வளைவாகவும் உள்ள ரோட்டில், அதிவேகமாக வரும் வாகனங்கள் பாதை தடுமாறி விபத்துக்குள்ளாகிறது. இதனை தடுக்க, ரோட்டின் விளிம்பு பகுதியை அடையாளப்படுத்த இந்த ஒளிபிரதிபலிப்பான், மரங்களில் ஒட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE