பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் சின்னேரிபாளையம் கிராமம் அமைந்துள்ளது. ரோட்டின் இடது பக்கமாக, தனியார் நிறுவனத்துக்கு உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. தற்போதைய நிலையில், மின் கம்பிகள், நெடுஞ்சாலைதுறையினருக்கு சொந்தமான புளியமரக்கிளைகளுக்கு இடையே ஊடுருவி செல்கின்றன.இதனால், மரத்தில் மின்சாரம் பாய்ந்து, மின் விபத்து ஏற்பட்டு விடுமோ என, நிழலுக்கு ஒதுங்குபவர்கள், கால்நடை வளர்ப்போர், பஸ்சுக்கு காத்திருப்போர் மற்றும் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதியை சேர்ந்தோர், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் அல்லது மரத்தை அடியோடு வெட்ட வேண்டும் மேலும் மின்கம்பங்களை வேறு இடத்தில் நட்டு மரத்தை காப்பாற்ற வேண்டும் என, மின்வாரியத்துக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.மின் விபத்து ஏற்படுவதை தடுக்க, உடனடியாக மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மின்வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE