பஸ் ஸ்டாப்பில் திடீர் குளம்: பயணிகள் திண்டாட்டம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதியில் பருவமழை காலத்தையொட்டி, பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது. தளி பேரூராட்சியில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அப்பகுதியில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாதால், குடியிருப்பு மற்றும் பஸ் ஸ்டாப் அருகே, மழைநீர் குளமாக தேங்கியுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக, தளி
 பஸ் ஸ்டாப்பில் திடீர் குளம்: பயணிகள் திண்டாட்டம்

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதியில் பருவமழை காலத்தையொட்டி, பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது. தளி பேரூராட்சியில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அப்பகுதியில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாதால், குடியிருப்பு மற்றும் பஸ் ஸ்டாப் அருகே, மழைநீர் குளமாக தேங்கியுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக, தளி பகுதியில் மழைநீர் தேங்குகிறது. பஸ்சுக்கு செல்லும் பயணிகள், குளமாக தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல வேண்டி இருப்பதால், நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொசுப்புழு உற்பத்தி அதிகரிக்கும் முன், மழைநீர் வடிந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X