சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு நலத்திட்டங்களில் மோசடி

Added : நவ 18, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : குன்னியூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத்திட்டங்களில் மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:கடந்த 20 ஆண்டுகளாக குன்னியூர் ஊராட்சி செயலாளராக ரங்கநாதன் பணிபுரிந்து வருகிறார். குன்னியூரில் செயல்படுத்தப்படும் மின் விளக்கு மற்றும் கழிவறை அமைத்தல், வரப்பு மடித்தல்,

கள்ளக்குறிச்சி : குன்னியூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத்திட்டங்களில் மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:கடந்த 20 ஆண்டுகளாக குன்னியூர் ஊராட்சி செயலாளராக ரங்கநாதன் பணிபுரிந்து வருகிறார். குன்னியூரில் செயல்படுத்தப்படும் மின் விளக்கு மற்றும் கழிவறை அமைத்தல், வரப்பு மடித்தல், ஏரி, சாலை, திடக்கழிவுகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களில், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.

இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு திட்ட பணிகளில் நடந்துள்ள மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன், ஊராட்சி செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X