சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடனை வசூலிக்க வந்தவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து அடாவடி

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
அய்யலுார்:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே காக்காயன்குளத்துப்பட்டியில், கடன் வசூலுக்கு வந்த தனியார் நிதிநிறுவன ஊழியர், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்துக் கொண்டார்.அய்யலுார் காக்காயன்குளத்துபட்டியைச் சேர்ந்த 37 வயது பெண் கூலி வேலை செய்கிறார். இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றார். கொரோனா சூழலால் வருமானம்
கடனை வசூலிக்க வந்தவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து அடாவடி

அய்யலுார்:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே காக்காயன்குளத்துப்பட்டியில், கடன் வசூலுக்கு வந்த தனியார் நிதிநிறுவன ஊழியர், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்துக் கொண்டார்.

அய்யலுார் காக்காயன்குளத்துபட்டியைச் சேர்ந்த 37 வயது பெண் கூலி வேலை செய்கிறார். இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றார். கொரோனா சூழலால் வருமானம் குறைந்து, கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.கடன் தொகை வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து கொண்டு, 'பணம் வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என கூறினார்.

கணவர் வெளியூர் வேலைக்கு சென்ற நிலையில், கிராமமே வேடிக்கை பார்க்க அந்த பெண் அவமானத்தில் கூனிக்குறுகி வீட்டிற்கு வெளியே நின்று பரிதவித்தார்.அப்பகுதி சமூக ஆர்வலர்கள் ஊழியரின் செயலை படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ''50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தேன். மாதம் 3500 ரூபாய் கட்டி வந்தேன். கொரோனாவால் தற்சமயம் கட்ட முடியவில்லை. கடன் குறித்து கேட்க வந்த நிறுவன ஊழியர் என் வீட்டு கட்டிலில் படுத்துக்கொண்டார். சிறிது நேரத்திற்குப்பின் சென்றுவிட்டார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayyo paavam naan - chennai,இந்தியா
20-நவ-202004:11:21 IST Report Abuse
ayyo paavam naan அவன் செய்தது தவறுதான் ஆனால் கடன் கொடுத்தவன் கேட்கப்போகும் போது தான் அவன் அநியாயம் செய்வது எல்லோருக்கும் தெரிகிறது.
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
19-நவ-202015:52:07 IST Report Abuse
CHINTHATHIRAI வசூல் செய்ய காரோண நிலவரம் முடிந்து ஆறு மாதம் சென்ற பின்னரே சரியான செயலாகும் . ஆளும் கட்சி சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate this:
Cancel
Yuva Rajan - chennai,குவைத்
19-நவ-202010:47:28 IST Report Abuse
Yuva Rajan நீ தான் சும்மா கொடேன் ஷண்முகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X