உடுமலை;மக்காச்சோளம் பயிர்களில், படைப்புழுதாக்குதல்குறித்து, வேளாண் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.உடுமலை பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இரு ஆண்டுகளாக, மக்காச்சோளப்பயிரில், படைப்புழு தாக்குதல் காரணமாக, பயிர் வளர்ச்சி பாதிப்பதோடு, மகசூலும் பெருமளவு குறைந்து வருகிறது. நடப்பு ஆண்டு சாகுபடியிலும், படைப்புழு தாக்குதல் துவங்கியுள்ளதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் வடிவேலு, உதவி இயக்குனர் தேவி மற்றும் அதிகாரிகள், சின்னவீரம்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்தனர்.வேளாண்துறையினர் கூறியதாவது:படைப்புழு தாக்குதல் மக்காச்சோளத்தில் மகசூலை பெருமளவு பாதிக்கும். இதைத்தவிர்க்க, மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களைஅழிக்கும் வகையில், கோடை உழவு செய்யும் போது, 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் நடவு செய்வது, நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான, பிவேரியா பேசியானா, 10 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தால், படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.பயிர்கள் நெருக்கமாக இருந்தால், தாக்குதல் அதிகரிக்கும்; இதை தவிர்க்க, இறவை சாகுபடியில், 60க்கு 25 செ.மீ.,; மானாவாரி சாகுபடியில், 45க்கு 20 செ.மீ.,இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தட்டைப்பயறு, சூரியகாந்தி மற்றும் பயறு வகை பயிர்களை வரப்புகளில் பயிரிட வேண்டும். இரண்டரை ஏக்கருக்கு, 12 இனக்கவர்ச்சி பொறிகளை பொருத்தவும், 15 முதல், 20 நாட்கள் வளர்ந்த பயிரில், அசாடிராக்டின் 150 பி.பி.எம்., ஒரு ெஹக்ேடருக்கு, 2.5 லிட்டர் மற்றும் 40 முதல் 45 நாட்கள் பயிருக்கு, பொட்டாசியம், 2.5 கிலோ ஒரு ெஹக்ேடருக்கு தெளிக்க வேண்டும்.மேலும், ஒரு ெஹக்ேடருக்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளான, ஸ்பைளோட்ரம், 11.7 சதவீதம், எஸ்.சி., 250 மில்லி அல்லது தயோ மீதாக்சிம் 9.5 சதவீதம், 250 மில்லி நன்கு குருத்துக்களில் விழும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.இவ்வாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE