மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், தொடர்ந்து மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பருவநிலை மாற்றத்தால், கடந்த சில நாட்களாக மடத்துக்குளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் முழுவதும் துாறலும், மாலை தொடங்கி இரவு முழுவதும் மழையும் பெய்கிறது. இதனால் பல மாதங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது.வழக்கமாக கிராமங்களில் நடக்கும் சந்தை கடைகள் அமைக்கப்படவில்லை. கால்நடைகள் பராமரித்து, பால் உற்பத்தி செய்பவர்கள் குறித்த நேரத்துக்கு சொசைட்டிற்கு பால் கொடுக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.தினமும் வேலைக்கு சென்று திரும்புபவர்கள் மற்றும் இதர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி, டூவீலர்கள் பயன்படுத்தி நடக்கும் வியாபாரம் மந்தமாக உள்ளது. அதிகாலையில் கமிஷன் மண்டிகளுக்கு விளைபொருட்களை எடுத்துச்செல்லும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஆனாலும், தொடர்ந்து மழை பெய்து அமராவதி அணை நிரம்பவும், பயிர்கள் காய்கறிகள் உற்பத்தி பெருகி மண்ணையும், மக்களையும் வளப்படுத்த அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE