பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு நீர்மட்டம் ஒரு அடி உயர்வு

Added : நவ 18, 2020
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 123.30 அடியானது.நேற்று காலை 8:30 மணிப்படி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 30, பெரியாறில் 16.2 மி.மீ., மழை பதிவானது. நீர் வரத்து வினாடிக்கு 809 கன அடியில் இருந்து 2985 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1167 கன அடி நீர்

தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 123.30 அடியானது.

நேற்று காலை 8:30 மணிப்படி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 30, பெரியாறில் 16.2 மி.மீ., மழை பதிவானது. நீர் வரத்து வினாடிக்கு 809 கன அடியில் இருந்து 2985 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1167 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3242 மில்லியன் கன அடியாகும்.

நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் அவ்வப்போது சிறிது நேரம் மட்டுமே சாரல் மழை பெய்தது.தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள நீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் முதல் ஜெனரேட்டரில் 39, இரண்டாவதில் 24, மூன்றாவதில் 42 என 105 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X