உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கபடுகின்றன.உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, 2 வகுப்புக்கான துணைத்தேர்வு, செப்., மற்றும் அக்., மாதம் நடந்தது. தனித் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான அசல், மதிப்பெண் சான்றிதழ், தேர்வு எழுதிய மையங்களில், நேற்று முதல் வழங்கப்படுகிறது.அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் தரப்படுகிறது. குறிப்பிட்ட பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்த மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.நிரந்தர பதிவெண் கொண்டு தேர்வெழுதிய மையங்களில், இதை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு மையங்களுக்கு செல்லும் தேர்வர்கள், முகக்கவசம் அணிந்து சமூக விலகல் பின்பற்ற வேண்டும். பிளஸ் 1, 2 வகுப்பு தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு, பழைய மற்றும் புதிய நடைமுறையின் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவது குறித்த விபரங்களை தேர்வு எழுதிய மையங்களில் அறிந்துகொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE