சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாதி சான்றிதழ் தராததை கண்டித்து 50 மலை கிராமங்களில் கறுப்புக்கொடி

Added : நவ 18, 2020
Share
Advertisement
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலையிலுள்ள, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, புதுார் நாடு மற்றும் ஏலகிரி மலையிலுள்ள அத்னாவூர், நரியம்பட்டு என, 50 மலை கிராமங்களில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், தங்களுக்கு எஸ்.டி., பிரிவில் ஜாதி சான்றிதழ் கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஒரு சிலருக்கு மட்டும், ஜாதி சான்றிதழ்
 ஜாதி சான்றிதழ் தராததை கண்டித்து  50 மலை கிராமங்களில் கறுப்புக்கொடி

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலையிலுள்ள, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, புதுார் நாடு மற்றும் ஏலகிரி மலையிலுள்ள அத்னாவூர், நரியம்பட்டு என, 50 மலை கிராமங்களில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள், தங்களுக்கு எஸ்.டி., பிரிவில் ஜாதி சான்றிதழ் கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஒரு சிலருக்கு மட்டும், ஜாதி சான்றிதழ் வழங்கி வந்தனர். இதை கண்டித்து நேற்று, 50 மலை கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஏலகிரி மலையின் மலைவாழ் மக்கள் கூறுகையில், 'டிசம்பர் மாதத்துக்குள் ஜாதி சான்றிதழ் வழங்கா விட்டால், அரசு வழங்கிய ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை அரசிடமே திருப்ப ஒப்படைப்போம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X