பொது செய்தி

தமிழ்நாடு

வேலை நிறுத்த விளக்க கூட்டம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.மத்திய அரசை கண்டித்து, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் வரும், 26ம் தேதி நடத்த எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில், பங்கேற்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
 வேலை நிறுத்த விளக்க கூட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.மத்திய அரசை கண்டித்து, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் வரும், 26ம் தேதி நடத்த எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில், பங்கேற்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பொள்ளாச்சி அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.அனைத்து கிளை தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு, எல்.பி.எப்., மாவட்ட மண்டல பொருளாளர் பாபு தலைமை வகித்தார். சி.ஐ.டியு., மண்டல தலைவர் பரமசிவம், ஏ.ஐ.டி.யு.சி., மண்டல தலைவர் மோகன்ராம் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் உட்பட சட்ட திருத்தங்களால், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும் வரும், 26ம் தேதி நடக்கும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும். அன்று, பஸ்களை இயக்கக் கூடாது என தொழிற்சங்க தலைவர் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X