பொது செய்தி

தமிழ்நாடு

தாளவாடி கோவிலில் சாணியடி திருவிழா

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில், ௩௦௦ ஆண்டுகள் பழமையான கோவிலில், சாணியடி திருவிழா கோலாகலமாக நடந்தது.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில், 300 ஆண்டு பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்துவரும் நான்காவது நாளில், சாணியடி திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா நேற்று காலை துவங்கியது. முன்னதாக கிராமத்தில்
 தாளவாடி கோவிலில் சாணியடி திருவிழா

ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில், ௩௦௦ ஆண்டுகள் பழமையான கோவிலில், சாணியடி திருவிழா கோலாகலமாக நடந்தது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில், 300 ஆண்டு பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்துவரும் நான்காவது நாளில், சாணியடி திருவிழா கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு விழா நேற்று காலை துவங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள பசுமாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு, கோவிலின் பின்புறம் குவிக்கப்பட்டது. இதை அடுத்து அலங்கரிக்கப் பட்ட பீரேஸ்வரருக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, கிராம மக்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு சென்றனர்.

பின், கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை, உருண்டைகளாக பிடித்து, ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, கொண்டாடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் விழாவை ரசித்தனர். பின் அனைவரும் குளத்தில் குளித்து விட்டு, பீரேஸ்வரரை வழிபட்டனர்.


விழா வந்த வரலாறு



இது குறித்து ஊர் பெரியவர்கள் கூறியதாவது: சிலநூற்றாண்டுகளுக்கு முன் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை சாணங்கள் சேகரிக்கும் குப்பை மேட்டில் வீசி விட்டனர்.ஒரு நாள் மாட்டு வண்டி குப்பை மேட்டின் மீது ஏறிச்சென்ற போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருந்தது.அப்போது ரரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி தீபாவளி முடிந்து நான்காவது நாள்,சாணத்திலிருந்து தான், மீண்டெழுந்ததின் நினைவாக சாணியடி விழா நடத்தக் கூறியதாக ஐதீகம். இதனையடுத்து முன்னோர்களின் வழி காட்டுதல் படி ஆண்டுதோறும் சாணியடி விழாவை கொண்டாடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202004:12:02 IST Report Abuse
J.V. Iyer ஆச்சர்யமாக இருக்கிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X