பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பூங்கா அமைந்தால், அதிகரிக்கும்... வேலை வாய்ப்பு!முதல்வரின் அறிவிப்பால் எகிறிய எதிர்பார்ப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
அவிநாசி அருகே 800 ஏக்கரில், தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற, தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, உயிர் கொடுத்தால், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவர்.பின்னலாடை நகரான திருப்பூரில், ஆண்டுக்கு, 56 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் என்ற நிலையில், ஆடை வர்த்தக தொழில், தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.அவிநாசியில், பின்னலாடை துறை சார்ந்த, 'ஜாப்

அவிநாசி அருகே 800 ஏக்கரில், தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற, தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, உயிர் கொடுத்தால், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவர்.பின்னலாடை நகரான திருப்பூரில், ஆண்டுக்கு, 56 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் என்ற நிலையில், ஆடை வர்த்தக தொழில், தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அவிநாசியில், பின்னலாடை துறை சார்ந்த, 'ஜாப் ஒர்க்' தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. அவிநாசி அருகே உள்ள சேவூரை மையமாக கொண்டு மட்டும், 20க்கும் மேற்பட்ட 'ஜாப் வொர்க்' தொழிற்கூடங்கள் உள்ளன. 2,000த்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவிநாசியிலும் நுாற்றுக்கணக்கான 'ஜாப் ஒர்க்' தொழிற்கூடங்கள் உள்ளன.திருப்பூரில் உள்ள பெரிய, பிரபல ஆடை உற்பத்தி நிறுவனங்களில் இருந்து, துணி வாங்கி, அவற்றை உள்ளாடை மற்றும் பிற ஆடைகளாக தைத்து, அயர்ன் செய்து, பேக்கிங் செய்து அனுப்பி வைப்பது தான் 'ஜாப் ஒர்க்' பெரும்பாலான வீடுகளின் வரவேற்பு அறை, 'ஜாப் ஒர்க்' தொழில்கூடமாக மாறியிருக்கிறது.இது குறித்து, சேவூரை சேர்ந்த 'ஜாப் ஒர்க்' உரிமையாளர்கள் கூறியதாவது:சேவூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம் போன்ற பல ஊராட்சிகளில், 'ஜாப் ஒர்க்' தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால்தான், அந்த ஊராட்சிகளில் பொருளாதாரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி, புளியம்பட்டி, நம்பியூர், அந்தியூர் போன்ற பிற இடங்களில் இருந்தும் கூட, இப்பகுதியில் 'ஜாப் ஒர்க்' செய்வதற்கு தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.இத்தொழில், செய்வோருக்கு வாரம், 2,000 முதல், 2,500 ரூபாய் வரை சம்பளம் நிச்சயம். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் ஜாப் ஒர்க் வேலை செய்தால், வாரத்துக்கு, 8,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சமீபத்தில், திருப்பூருக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அவிநாசி அருகே, தொழில் பூங்கா அமைக்கப்படும் என கூறி சென்றார்.
அதன்படி, அவிநாசி சேவூர் அருகேயுள்ள தத்தனுார் ஊராட்சியில், 800 ஏக்கர் நிலத்தில், ஜவுளிப்பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவிநாசி ஒன்றியம், தத்தனுார் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:தத்தனுாருக்கு அருகிலேயே ஈரோடு மாவட்ட எல்லை உள்ளது. எனவே, தொழில் பூங்கா அமையும் பட்சத்தில், வேலை வாய்ப்பு அதிகரித்து, குடும்ப பொருளாதாரம் உயரும்.ஏனெனில், இப்போதே, ஈரோடு மாவட்ட எல்லை பகுதிகளான நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டியில் இருந்து, ஆயிரக்கணக்கானோர், திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலை செல்கின்றனர்.
தத்தனுார் தொழில் பூங்கா அமையும்போது, நீண்டதுாரம் பயணிக்க வேண்டியதில்லை. ஒரே இடத்தில், 800 ஏக்கர் நிலம் ஒதுக்கும் வாய்ப்பு, தத்தனுாரில் உள்ளது.தனியார் நில உரிமையாளர்கள் நிலம் வழங்க தயாராக உள்ளனர். இங்கு தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என, சபாநாயகர் மூலம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்
- நமது நிருபர் - .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X